Breaking
Sun. Dec 22nd, 2024

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியும் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் இலங்கை மக்கள் அளித்த வாக்குகளுக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சிறப்பான எதிர்காலம், ஜனநாயகம் என்பன இந்து- பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வந்துள்ள அமெரிக்கா கடற்படை கப்பலை வரவேற்கும் நிகழ்வின்போது கெசாப் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் பல முக்கிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது இலங்கை மக்கள் நலன்கருதியே என்றும் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post