இலங்கையின் நிதிச்சந்தைக்குள் மேலும் ஐந்து வங்கிகள் விரைவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி இதனை உறுதிசெய்துள்ளது. இலங்கையில் செயற்படுவதற்காக ஐந்து வெளிநாட்டு வங்கிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
அண்மைக்கால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை கருத்திற் கொண்டே இந்த வங்கிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இவற்றுன் சீனா வங்கி மற்றும் ஜப்பானிய வங்கி என்பனவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.