Breaking
Mon. Dec 23rd, 2024
-அனா-
சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை இஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளார்.
ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஐ.எம்.எல். ஐஸ்வாடி வீதியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸில் (வயது – 28) எனும் இரண்டு வயது குழந்தையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
மரணமடைந்தவர் வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் கடந்த 23.04.2015ம் திகதி இலங்கையில் இருந்து சென்றுள்ள வேளையில் 26.04.2015ம் திகதி நல்லிறவு பணிரெண்டு மணியலவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் இதில் ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸில் என்பவர் மரணமடைந்துள்ளதுடன் அவர் பயணம் செய்த காரில் மோதுன்ட காரில் பயணம் செய்த கைக்குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதுடன் அக் குழந்தையின் தாய் காயமடைந்துள்ளதாகவும் மரணமடைந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸிலின் உறவினர் தெரிவித்தார்.
மரணமடைந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸிலின் ஜனாஸாவை சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மரணமடைந்தவரின் தாய் மாமன் எச்.எம்.லெப்பைத்தம்பி தெரிவித்தார்.

Related Post