Breaking
Mon. Dec 23rd, 2024

வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்து நேபாளத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி மேற்கொள்ளாதா என அனுர குமார திஸாநாயக்க வினவியுள்ளார்.

அதற்கு பதலளிக்கும் வகையில் கடந்த அரசாங்கத்தில் வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்தே ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு  வெளியேறியுள்ளனர்.

அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வரவிரும்புவதால் அதற்கான நடவடிக்கைகளை தமது அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் உள்ள இலங்கை ஊடகவியலாளர்களை இலங்கைக்கு அழைத்துவருவதில் சிக்கல் நிலையேற்பட்டுள்ளதாகவும்,

நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்வினால்,காத்மன்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது,அதனால் அவர்களுக்கான புதிய விமான சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மிக விரைவில் அவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post