Breaking
Mon. Mar 17th, 2025

இந்தியாவையடுத்து இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட்சி பதிவாகியுள்ளது.

களனி – பியகம வீதியின் களுபாலத்தின் கீழ் கொள்கலன் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதால் புகையிரத சேவைகள் தாமதமாகின.

குறித்த விபத்தினால் இரு புகையிரத பாதைகள் சேதமடைந்து, பிரதான புகையிரத சேவைகளின்   போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டன.

இதனால் புகையிர நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்து நின்றவர்கள்  வேறு புகையிரதங்களில் ஏறி பயணத்தை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பயணிகள் இவ்வாறு புகையிரதத்தில் பயணித்ததை கடந்த காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது, இந்நிலையில் கொழும்பில் இவ்வாறு புகையிரதத்தில் பயணிகள் ஆபத்தான முறையில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post