இலங்கை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள யுனேஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி எரினா பொக்கோ பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்.
திருமதி எரினா பொக்கோவுக்கும் இலங்கையின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று (16) நடைபெறவுள்ளது.
அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தலைமையில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞான ரீதியான செயற்றிட்டங்கள் குறித்து திருமதி எரினா பொக்கோவா தெளிவுபடுத்தவுள்ளார்.
இந்தச் செயற்றிட்டங்களுக்காக இலங்கை விஞ்ஞானிகளின் அறிவையும் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வது குறித்து அங்கு கலந்துரையாடப்படும்.