Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம் அடுத்த வருடம் இலங்கையில் அமைக்கப்பட உள்ளதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணிலை சந்தித்த நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஸ்டீவன் ஜொய்ஸ், வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே மற்றும் முதன்மை தொழிற்துறை அமைச்சர் நாதன் கய் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கல்வித்துறை அதாவது ஆங்கிலம் கற்பித்தல் தொடர்பில் உதவிகளை பெறுவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் அரசியல் அமைப்பு குறித்த இலங்கை கவனம் செலுத்தி வருவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் அரசியல் அமைப்பான கலப்பு உறுப்பினர் விகிதாசாரத் தேர்தல் முறை (MMP system) குறித்து இலங்கை நாடாளுமன்றம் விசேடமாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் மூலம் இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன நடக்கிறது என்பதை கற்றுக் கொள்வார்கள் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post