வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது.
இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார்.
இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தூதுவர் கொண்டு வந்த பொருட்களை மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெற்றுக்கொண்டார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பல இடங்கள் இருக்கும் போது முஸ்லிம்கள் செறிவாக வாழும் கொலன்னாவை வெல்லம்பிட்டி பிரதேசத்திற்கு இஸ்ரேல் அவசர அவசரமாக மருத்துவப்பொருட்களை கொண்டுவந்தமை சந்தேகத்தையே எழுப்புகின்றது.
தினம் தினம் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகள் பலஸ்தீனில் கொல்லப்படும் போது இஸ்ரேலுக்கு தோன்றாத மனிதாபிமானம் இன்று இலங்கை முஸ்லிம்களிடத்தில் எழுந்துள்ளது.
இது இன்றைய நேற்றைய அஜந்தா அல்லா. சுமார் முப்பது வருடகாலமாக இஸ்ரேல் இலங்கையில் கால்பதிப்பதற்கு முனைந்து வருகின்றது. எனினும் அது அவர்களினால் முடியவில்லை. ஆனால் அதற்கான சூழல் தற்போது அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இஸ்ரேலின் ஆதிக்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே இலங்கையில் கோலோச்சி வந்துள்ளது. இதனை வரலாறு நெடுகாகவும் அவதானிக்கலாம்.
லலித் அதுலத் முதலி இஸ்ரேலுடன் நெருக்மான தொடர்பினை கொண்டிருந்ததுடன் இஸ்ரேலில் காணப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் திட்டத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்திருந்தார்.
இஸ்ரேலில் காணப்பட்ட ஹோம் கார்ட் என்னும் பாதுகாப்பு முறையை இலங்கைக்கு அறிமுகம் செய்தது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே.
1986ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இஸ்ரேலிய தூதுவராலயம் அமையப்பெற்றது. இதனை எதிர்த்து முஸ்லிம்கள் போராடி அதனை அகற்றினார்கள். இந்த போராட்டத்தில் குண்டடிபட்டு இன்றவரை எழுந்து நடக்க முடியாமல் சுமார் முப்பது வருடங்கள் நிந்தவூர் அலியார் வாழ்ந்து வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை அகற்ற முஸ்லிம்களிடம் ஏற்பட்ட சமுக உணர்வுப் போராட்டமே முஸ்லிம் காங்கிரஸை ஸ்தீரப்படுத்தியது.
2015ம் ஆண்டு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மலர்ந்தபோது மீண்டும் இஸ்ரேலுடனான உறவு புதுப்பிக்கப்பட்டது. சுமார் ஐந்துபோர் அடங்கிய தூதுக்குழுக்கள் இலங்கைக்கு வந்து இலங்கை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இஸ்ரேலிய தூதுவர் மிகவும் பகிரங்கமாக மனிதாபிமான உதவிகள் என்னும் பெயரில் இஸ்ரேலிய கொடிகளுடன் முஸ்லிம் பிரதேசத்திற்கு வருகைதந்து பொருட்களை கையளித்துவிட்டுச் சென்றுள்ளார்.
கடந்த ஆட்சியில் பள்ளிவாசல்களில் ஒரு கற்துண்டு விழுந்தால் பள்ளிவாசலே தரைமட்டமானது போல் கூக்குரலிட்டு அரசியல் செய்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு இந்த விடயம் தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை.
இவர்கள் எல்லோரும் தற்போது இஸ்ரேலின் காலூன்றுதலை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதினால் இவர்களால் வாய்திறக்க முடியாது.
பள்ளிவால்களில் கல்லெறிவீச்சுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வீதிக்கு இறங்கிய நாம் உலகில் ஒரு பள்ளிவாசலும் இருக்கக் கூடாது என்ற அஜந்தாவை பலநூறு வருடங்கள் செற்பாட்டில் கொண்டிருக்கும் இஸ்ரேல் காரனுக்கு இலங்கையில் அங்கீகாரம் வழங்கப்போறோமா? அல்லது இவர்களுக்கு எதிர்ப்பு காட்டி எமது ஈமானிய உணர்வை வெளிப்படுத்தப் போறோமா?