Breaking
Fri. Dec 27th, 2024

இந்தியாவின் இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனமான பஜாஜ்  எலெக்ரிக்கல்ஸ் நிறுவனம் தரமான தனது இலத்திரனியல் சாதனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது.

இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் பாரிய சேவையாற்றும் பஜாஜ் நிறுவனம், இலங்கையில் இரு வர்த்தக நிறுவனங்ளை தனது ஏக விநியோகஸ்தர்களாக நியமித்துள்ளது.

சுமாராக 300 வர்த்தகர்களை தமது அறிமுக உற்பத்திப் பொருட்களை நேரில் பார்வையிடும்படி குறித்த இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

பொருட்களின் தரம் மட்டுமல்ல, அனுபவஸ்தரான பாவனையாளரின் கையிலும் அது இருந்தால்தான் சிறப்பு என்று இந்நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

20 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்ட பஜாஜ் குரூப்பின் ஒரு கிளை நிறுவனந்தான் பஜாஜ் எலெக்ரிக்கல்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில்  எம்பிலிப்பிட்டிய என்ற இடத்தில் பஜாஜ் உலகம் என்ற பெயரில் தன் முதல் காட்சியகத்தை இது திறந்து வைத்துள்ளது.

By

Related Post