Breaking
Sun. Dec 22nd, 2024
இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் இராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கைக் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கியூ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தாம் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளித்ததாகவும் குறித்த அடையாள அட்டை பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே காணாமல் போய்விட்டதாகவும் இந்த அடையாள அட்டை எவ்வாறு குறித்த சடலத்தில் காணப்பட்டது என்பது புரியவில்லை எனவும் பூமிதுரை தெரிவித்துள்ளார்.

By

Related Post