Breaking
Thu. Nov 7th, 2024

ஊடகப் பிரிவு

இலங்கையில் சிறு தொழில் நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான் ஜப்பான் நாட்டு தூதுவர் நொபிஹிட்டோ ஹேயோ கைத்தொழல்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் இன்று தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜப்பான் றாட்டின் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன்,எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும இடையில் காணப்படும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம் பெற்ற இந்த சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பந்துல எகொடகே,ஜப்பான் பிரதி தூதுவர்அசோகோ ஒகாய்,வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ்.குமார ரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள்,நாட்டின் முதலீடுகள் தொடர்பிலும்,தற்போது இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கும் அபிவிருத்தி தொடர்பிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தமது நன்றிகளை இங்கு தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கை பல்வேறு வகையான பொருட்களை ஏற்றுமதி செய்வதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் எதிர்காலத்தில் இன்னும் நெருக்கமான உறவுடன் இலங்கை ஜப்பானுடன்,செயற்படவுள்ளதாகவும் கூறினார்.

அதே வேளை இலங்கையின் தெங்கு உற்பத்திகளுக்கு ஜப்பான் சந்தையில் அதிகமான கிராக்கி காணப்படுவதாகவும்,இலங்கையில் இருந்து தேங்காய் எண்ணெய்,தேங்காய் துருவல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஜப்பான் இறக்குமதி செய்வதாகவும் ஜப்பானிய தூதுவர் இதன் போது தெரிவித்தார்.

நவீன உலகின் வேகத்திற்கு ஏற்ப தொழில் நுட்ப வளர்;ச்சியினை இலங்கைக்கு அறிமுகம் செய்ய ஆவலாக ஜப்பான் உள்ளதாகவும்,இது தொடர்பில் தமது அமைச்சின் உயர் மட்ட குழுக்களுடன் பேச்சுக்களை நடாடத்த தயராகவுள்ளதாக ஜப்பானிய தூதுவர் கூறினார்.

இது தொடர்பில் தாம் நன்றி தெரிவிப்பதாகவும்,இவ்வாறான மத்திய தர கைத்தொழில் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பில் தாம் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது குறிப்பிட்டார்.

Related Post