இலங்கையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் புதிய ஜனநாயக நம்பிக்கைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, எனவே, அவற்றைத் தக்கவைக்க இந்தியா போன்ற அயல் நாடுகள் உதவவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா, புதுடில்லியிலுள்ள சிறிகோட்டை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினர். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவமுடியும். நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல அதிகாரம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் இலங்கைக்கு இந்தியா ஒரு வகிபங்கை கொடுக்கமுடியும். பர்மா தொடக்கம் இலங்கை வரை தற்போது அமைதி நிலை காணப்படுகிறது. இங்கே ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கைகள் இருக்கிறன.
எனவே இந்தியா தனது தேர்தல் அனுபவங்கள், அறிவியல் மருத்துவ நிபுணத்துவங்களை இந்த நாடுகளுடன் பகிரமுடியும். குறிப்பாக தொற்று நோய்களால் ஏற்படும் சிசு மரண வீதத்தை குறைப்பதற்கு இந்தியா தன்னிடமுள்ள அறிவியல், மருத்துவ நிபுணத்தவத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.