இன்று உலக பக்கவாத நோய் தினமாகும். அதனை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்கவாத நோய் காரணமாக இலங்கையில் தினமும் 30 பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்படும் பாதிப்பு பக்கவாதம் எனப்படும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பக்கவாதம் வராமல் தடுப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29ஆம் திகதி உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
புகைத்தல் மற்றும் அதிகமாக உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல் பக்கவாதம் ஏற்படக் காரணமாக உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.