இலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாக சியாம் சிமெந்து நிறுவனம் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது!
-ஊடகப்பிரிவு-
‘இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழுவோடு இணைந்து இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றினைந்துள்ளோம்’ என இன்சீ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் முனைவோர் கூட்டு பங்குடைமையாளர்களின் அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார், லாவோஸ், பங்களாதேஷ், இந்தியா மற்றும் ஆகிய நாடுகளில் பாரிய சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் செயற்படும் இன்சீ சிமெந்து, தாய்லாந்தின் சியாம் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதனை சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் என அழைப்பதுண்டு.
இவ் அமர்வில் தொடர்ந்து ஜான் குனிக உரையாற்றும்போது தெரிவித்தாவது,
இந்த முன்னோடியான முன்முயற்சினை, தேசிய தொழில் அபிவிருத்தி அதிகாரசபை உடன் இன்சீ சிமெண்ட் இணைந்து நடத்தும். நாடு முழுவதும் 45 நகரங்களில் கூட்டு 4400 இலங்கை கட்டுமானத் தொழிலாளார்கள் மற்றும் கல்தச்சர்கள் (மேசன்மார்கள்) காணப்படுகின்றனர். இவர்களுக்கு இன்சீ சிமெண்ட் குழு, புதிய திறன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதுடன், உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் கடைபிடிக்கப்படும் சமீபத்திய தொழில் மற்றும் கட்டுமான தொழில்நுட்பங்களையும் வழங்கும். பல்வேறு மட்டங்களில் அடங்கிய இப்பயிற்சிகள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு இன்சீ ஏறக்குறைய ரூ. 2.2 மில்லியன் முதலீடு செய்கிறது.
முன்னர் ‘ஹொல்சிம் லங்கா’ என அழைக்கப்பட்டு வந்த இன்சீ சிமெண்ட், அதன் மக்கள் மற்றும் பங்குதாரர்களின் நீண்டகால அபிவிருத்திக்கு எப்போதும் உறுதியாக இருந்து வந்தது. கட்டுமானத் தொழில் தொழிலாளர்கள், மேசன்கள் எங்களுடைய தயாரிப்புக்களின் விளம்பர தீர்வுகளை பயன்படுத்தும் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர். தீர்வுகளை பொறுத்தவரை, இன்சீ சிமெண்ட் அதன் முந்தைய அனுபவத்துடன் இலங்கையின் சிமெந்து சந்தையில் மிக புதுமையானதும் மற்றும் முன்னணியில் திகழும் நிறுவனம் ஆகும்.
இலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுவனமாக நாம் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுகிறோம். இது இலங்கை சந்தையில் உறுதியுடன் மட்டுமல்லாமல், உகந்த அமைப்புடன் வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு வலிமையையும் கொண்டுள்ளது. நாங்கள் இப்போது உள்ளூர் வெளியூர் என 20,௦௦௦ ஆட்பலத்தினை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொண்டிருக்கின்றோம் என்று குனிக் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
தாய்லாந்தின் சியாம் சிட்டி சிமெண்ட் (லங்கா) லிமிடெட் (INSEE) இந்த முன்னோடியான முன்முயற்சியில் ஒன்றினைந்து, தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமைக்கு எனது பாராட்டினை தெரிவிக்கின்றேன். தொழில்துறையினரை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களை அரசத்துறை வேலைவாய்ப்பில் சுமத்தக் கூடாதென, தேசிய கூட்டு அரசாங்கத்தின் சீர்திருத்த நோக்கின் ஒரு பகுதியாக உள்ளது. சுய தொழிலானது நம் பொருளாதாரத்தில் பெரிதும் உதவுகிறது. இன்சீ சிமெந்து நிறுவனம் இலங்கையின் தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி முன்முயற்சியின் பாகமாக அடியெடுத்து வைப்பதை நான் மீண்டும் பாராட்டுகிறேன்.
இன்சீ சிமெந்து நிறுவனத்தின் கூட்டு 4400 சுயேச்சை மற்றும் சுயேச்சை அல்லாத இலங்கை மேசன்மார்களின் (கல்தச்சர்கள்) தொழில்நுட்பத் திறன் இவ் வருடம் டிசம்பர் மாத முடிவில் முடிவடைந்துவிடும். தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில்முனைவோர், சுய தொழில் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை தலைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை பெற்றுக்கொண்டு திறன்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்திச் சட்டத்தின் படி தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வளர்ச்சியை மேம்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி, விரிவாக்கம், எளிதாக்கல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை தூண்டுதல் மற்றும் இலங்கைக்குள் மக்களின் மனிதவள மூலதன வளர்ச்சியுடன் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தொழில்முனைவோரின் அணுகலை எளிதாக்குதல் என்பவற்றைக் கொண்டுள்ளது என அமைச்சர் ரிஷாட் கூறினார்.