எதிரணிக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது பொதுவேட்பாளர் தரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது கடந்த மூன்று வாரங்கள் மைத்திரிபால சிறிசேன சார்பில் மேற்கொண்ட பிரசாரங்கள் மூலமாக அவர் பிரசித்தம் பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா மேற்கொண்ட பிரசாரங்கள் மூன்று வாரக்காலப்பகுதியில் சரிவடைந்து வந்தமை இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது என்று கொழும்பின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.