Breaking
Fri. Nov 22nd, 2024
சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு மருத்துவ அமைச்சு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நாட்டினுள் மலேரியா பரவுதல் முழுமையாகக் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது என்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று உத்தியோகவபூர்வமாகத் தெரிவித்தார்.
அமைச்சு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் பயனாக 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டினுள் எவரும் மலேரியா நோய்க்கு உள்ளாகவில்லை என்று- சுட்டிக்காட்டிய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, எம்மைச் சூழவுள்ள நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி நாடு திரும்புபவர்கள் அவ்வப்போது இனம் காணப்படுவதாகவும், அவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பும் இலங்கையரும், இந்நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவரும் அடங்கியுள்ளனர் எனவும் கூறினார்.
இதன் காரணத்தினால் மலேரியாவுக்கு உள்ளானவர்களாக எவராவது இனம் காணப்பட்டால் உடனடியாக மலேரியத் தடுப்பு இயக்கத்திற்கு அறியத் தருமாறு நாடெங்கிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2016 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரையும் 16 பேர் மலேரியாவுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் வெளிநாட்டவர்களாவர்.
இவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்நோய்க்கு உள்ளானவர்களாக எவராவது இனம் காணப்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மலேரிய ஒழிப்பு இயக்கப் பணிப்’பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத்துக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

By

Related Post