இலங்கையில் இஸ்ரேல் நட்புறவு மன்றம் நிறுவப்பட்டதை தொடர்ந்து… இலங்கையில் முதலீடு செய்வதில் இஸ்ரேல் முதலீட்டார்கள் கடும் முனைப்பு காட்டிவருவதை அவதானிக்க முடிகிறது.மிக அண்மைக்காலத்தில் இலங்கை அமைச்சுகள் சிலவற்றுக்கு விஜயம் செய்தபோது அமைச்சின் அமைச்சர்கள் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக தகவல் வழங்கப்பட்டது.அண்மையில் தேசிய வன அமைச்சுக்குக்கு விஜயம் செய்த போது யால மற்றும் வில்பத்து வனங்களில் கேபள் கார் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டாலர்களுடன் அமைச்சர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டது.
இது தவிர நகர அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுகளின் வேலைத்திட்டங்களுக்கு இஸ்ரேல் முதலீட்டாளர்கள் பணம் முதலீடு செய்ய முனைப்பு காட்டிவருவதாக தெரிவிக்கபடுகிறது. mn