Breaking
Sat. Jan 11th, 2025
இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது.

ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த நிறுவனம், தற்போது பெங்களுர் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது

இந்தநிலையில் நிறுவனம், புதுடில்லி, மும்பாய், குஹாஹெட்டி, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவவுள்ளது

இதன்படி இந்தியாவில் மாத்திரம் 100 கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் தமது நிறுவனம் உடலை பருமனில் இருந்து தடுக்கும் உணவுகள் மற்றும் ஆடைகள் என்பவற்றையும் விற்பனை செய்யவுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By

Related Post