Breaking
Wed. Jan 8th, 2025
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) 
பாது­காப்புச் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தொடர்பில் வெளியிட்ட கருத்­தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கண்­டித்­துள்­ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து;
சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறு புனையப்பட்ட கருத்துக்கள் பரப்படுவதால், அரசாங்கத்துக்கே சர்வதேசத்தில் களங்கம் ஏற்படுகிற­து.
இலங்கையின் சுதந்திரத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். ஏனைய மதங்களுடன் பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுத்துள்ளனர் .


தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் எந்த ஒருவரும் இலங்கையில் அடையாளம் காணப்படவில்லை.
எனவே பாதுகாப்பு செயலாளர் தமது கருத்தை தெளிவாக்க வேண்டும் எனவும் அமைச்­சர் ரிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.

Related Post