இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 40 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதாக புற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நாட்டுப் பெண்களில் நாளாந்தம் 6 – 7 பெண்கள் மார்பு புற்றுநோய் காரணமாக சிகிச்சைக்கு வருவதாகவும் வைத்திய நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதன்படி வருடமொன்றுக்கு சுமார் 250 பெண்கள் மார்புப் புற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்டில் புற்றுநோயால் பாதிக் கப்படுபவர்களில் 25 சத வீதமானோர் மார்புப் புற்றுநோயால் பாதிப்படைவ தாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்ற னர்.