Breaking
Sun. Jan 12th, 2025

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை புதுப்பிக்க ஆபிரிக்கா ஆவலாக இருக்கின்றது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க சில வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கும் இணங்கியுள்ளது. மேலும் இலங்கையுடன் பல வர்த்தக தொடர்புகளை எதிர்பார்பார்கின்றோம். அடுத்த வருடம் அதிகாரபூர்வ அரச அதிகாரிகள் உட்பட வர்த்தக பிரதிநிதிகளை நைரோபிக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுவிக்கின்றோம். இவ்விஜயத்தினுடாக மூன்றிற்கும் மேற்பட்ட எமது வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கு சமீபத்திய ஆலோசனைகளினை தீர்மானிக்க முடியும்.
நேற்று (17) திங்கட்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் கென்யா – நைரோபியாவுக்கான தூதுவரும் பொருளாதார வெளியுறவு விவகாரம் மற்றும் சர்வதேச வர்த்தக பணிப்பாளர் நெல்சன் டிரன்ங்க்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே தூதுவர் நெல்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது தூதுவர் நெல்சன் அங்கு தொடந்து தெரிவித்ததாவது:
நாங்கள் 2030 ஆம் ஆண்டளவில் மத்தியதர வருமானம் கொண்ட நாடாக வளர்ச்சியடைவதற்கு இலக்காக கொண்டுள்ளோம்.இத்துடன் இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் வணிக தொடர்புகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.அடுத்த ஆண்டு இலங்கையில் இருந்து நைரோபி வரவிருக்கும் உயர் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்க்கின்றோம். தற்போது பேச்சுவார்த்தையளவில் உள்ள இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை, இருதரப்பு முதலீடுக்ககான பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பு உடன்படிக்கை ஆகிய மூன்று ஒப்பந்தங்களினை உங்கள் வருகையின் நிமித்தம் நாம் விவாதித்து கைச்சாத்திட்டு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்கின்றோம்.

விவசாய ஒத்துழைப்புக்கான வரைபு ஒப்பந்தம் இப்போது முடிவுநிலைக்கு வந்துள்ளது. அதனை கைச்சாத்திட விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு இலங்கைக்கு வருவதற்கு தயாராக உள்ளது. இரு நாடுகளுக்குமிடையே சகல இருதரப்பு ஒப்பந்தங்களிலும் வலுவான வணிகம் காணப்படுகின்றன. நாங்கள் வர்த்தகத்தினுடான வர்த்தக (டீ2டீ) உரையாடல்களையும் வர்த்தக சம்மேளன பரஸ்பரங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆண்டு நைரோபி வர்த்தக சம்மேளனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் விளைவாக இரண்டு வர்த்தக சம்மேளனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இருதரப்பு வர்த்தகத்தினை வலுப்படுத்தின.
நாங்கள் இந்த வர்த்தக பயணத்தினை ஒரு குறிப்பிடத்தக்க வழியில்; இணைப்புகள் ஏற்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தினுடாக வர்த்தகத்தினை விரிவுபடுத்த வேண்டும்.இதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தினை 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு 13,94 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து காணப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டில்; 12,78 மில்லியன அமெரிக்க டொhராக இருந்தது.
2013 ஆம் ஆண்டில்;, கென்யாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி இயற்கை ரப்பர், டயர்கள், சாக்கு மற்றும் பைகள், நார் கண்ணாடி (ஃபைபர);, தேயிலை, அரிசி, தேங்காய் நார், மற்றும் செயல்படுத்தப்படுகிற கார்பன் ஆகியன பிரதானமாக காணப்பட்டன.
இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்தன, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே , பணிப்பாளர் நாயகம் சுஜாதா வீரகோன் , வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆ.டி.எஸ்.குமாரரட்ண உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Post