Breaking
Fri. Nov 15th, 2024

‘வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து உருவாக்கிய செயற்றிட்டங்களை இரு நாட்டு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பிரதிநிதித்துவத்தின் சார்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு அனுசரணை ஒப்பந்த உள்ளகக் கலந்துரையாடல் அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

‘எமது இந்த பரஸ்பர நோக்கானது இரு நாடுகளுக்கிடையே வெறுமனே பொருளாதார உறவை மட்டும் வலுப்படுத்தவதாக அமையாமல், இலங்கை வாழ் மக்களுக்குப் பொருளாதார நன்மைகளை வழங்குவதாகவும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதாகவும் இலங்கை அரசின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழிற்கொள்கைகளை அபிவிருத்திச் செய்ய உதவுவதாகவும் அமைகின்றது.
2015இல் நடைபெற்ற தற்போதைய அரசின் தேர்தல் காலம் தொடக்கம், இலங்கையில் ஜனநாயக உரிமைகள், சமரச நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றில் முன்னேற்றகரமானதொரு நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை, அரசியல் மாற்றங்கள் இலங்கைக்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், புதிய சந்தை வாய்ப்புகள், புதிய தொழிற்சாலைகள், புதிய தொழில்கள் என்பவற்றுக்கான அஸ்திவாரத்தையும் உருவாக்கியுள்ளன. உண்மையில், அரசியல் சீர்திருத்தமும் பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஒன்றாகக் கைகோர்த்துச் செல்லும் என்பதை இலங்கை நாடானது உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கின்றது’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post