மெல்பேர்ன் மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற குறித்த அகதிகள் தொடர்பான வழக்கின் போது, எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் 15ஆம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி நீதிபதி கென்னத் கெய்னின் தலைமையில் முழுமையாக கென்பராவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஒக்டோபர் விசாரணையின் போது ஐக்கிய நாடுகள் சபையையும் வழக்கில் தொடர்புபடுத்த அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்த 157 அகதிகளும் இலங்கைக்கு மீண்டும் அனுப்பப்படக்கூடாது என்பதற்காகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஆழ்கடலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு இருக்கும் அதிகாரம் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தாம் எதிர்பார்ப்பதாக ஜோர்ஜ் நியூகௌஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த வழக்கில் அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும் என்று அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
50 சிறுவர்கள் உட்பட்ட குறித்த அகதிகள் 157 பேரும் ஆழ்கடலில் ஜன்னல்கள் அற்ற அறைகளில் 22 மணித்தியாலங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.