Breaking
Thu. Nov 14th, 2024
பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி. எனினும், அது சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அதனை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு காரணம் 2030ஆம் ஆண்டளவில் இலங்கை அதிக வருமானம் பெறும் நாடாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சியை 6.5 வீதமாக அதிகரிக்க நாம் எமது வேகத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, எமது உழைப்பு இந்த இலக்கை அடைய திரட்டப்பட வேண்டும், எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

By

Related Post