Breaking
Mon. Dec 23rd, 2024

– முஹம்மட் புஹாரி –

இலங்கை அதிபர் சேவை தரம்-111 க்கான போட்டிப் பரீட்சை எதிர் வரும் 10ம் திகதி நடை பெற இருக்கின்றது.இவ் பரீசைக்கு தோற்று கின்ற ஆசிரியர்களில் அதிகமானவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளமையினால் அவ் பரீட்சையை தற்காலிகமாக இடை நிறுத்தி பிரிதொரு தினத்தில் நடாத்துமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை இணைச் செயலாளர் ஏ.எம்.றஹீம் அவசர தந்தி ஒன்றினை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அவ் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-உயர்தர பரீட்சையின் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.இவ் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் எதிர் வரும் 9,10 ம் திகதிகளிலேயே முடிவடையும்.ஆனால் அதிபர் சேவை தரம் 111க்கான பரீட்சை 10ம் திகதி இடம் பெறவுள்ளது.

ஆனால் இவ் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களில் பெரும்பாலோனோர் வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.10ம் திகதி பரீட்சை இடம் பெறுமாக இருந்தால் இவர்களால் அதிபர் சேவை பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போகும் எனவே இப் பரீட்சையை பிற்படுத்தி பிரதொரு தினத்தில் நடாத்துமாறு அவ் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
றஹீம் தொ.இல-0772281451

By

Related Post