Breaking
Fri. Jan 10th, 2025

இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் வகுப்பில் நிலவும் 4431 வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நாட்டின் சகல பாகங்களிலும் யூலை மாதம் நடைபெறவுள்ளது.

கிரகித்தல், பாடசாலை நிருவாகம் மற்றும் பொதுஅறிவு, (நூண்ணறிவு உற்ட்பட) ஆகிய 3 பாடங்களில் 5 மணித்தியாலங்கள்  நடைபெறும் இப்பரீட்சைக்காக  ஆசிரியர்களைத் தயார் படுத்தும்  நோக்கில் தலைசிறந்த வளவாளர்களைக் கொண்டு பரீட்சை வழிகாட்டி செயலமர்வுகளை “Young Friends” அமைப்பு  ஏற்பாடு  செய்துள்ளது.

ஒரு சமூக சேவை அமைப்பாகச் செயற்படும் “Young Friends” இலங்கை நிர்வாக சேவை, கிராம உத்தியோகத்தர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை போன்ற பரீட்சைகளுக்காக பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகளை நடாத்திய அநுபங்களுடன்  இப்பரீடசைக்கான செயலமர்வுகளையும் சிறப்பாகத் திட்டமிட்டு நடாத்தவுள்ளது.

.கண்டியை மையமாகக்  கொண்டு நடாத்தப்படவுள்ள இச்  செயலமர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள்.. தமது  பெயர்  முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை  07141225230725111219 ஆகிய தொலைபேசி இலக்கத்துக்கு SMS ஊடாக அனுப்பி வைப்பதன் ஊடாக பதிவு செய்து கொள்ளலாம்..

மட்டுப்படுத்தப்பட்ட  எண்ணிக்கையினருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதால் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.

S.M.Rafi (Dip.in.mgt, BMS.sp)

Velamboda

Related Post