Breaking
Sun. Mar 16th, 2025

ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இதனை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்

நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு அளித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

ஊழலற்ற ஒரு உலகை உருவாக்கும் நோக்குடன் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு நடைபெறுவதுடன், ஊழலை ஒழித்துக்கட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாநாட்டில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது என பிரித்தானியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post