Breaking
Sat. Sep 21st, 2024

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும் அவை முஸ்லிம்களின் பொதுச்சொத்துக்கள் என்றும் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஆதரவளிக்காமல் விலகி நின்றமை முஸ்லிம்களுக்கு ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் அத்துமீரல்களையும் – மனித உரிமை மீறல்களையும் – அடாவடித்தனங்களையும், நன்கு அறிந்துள்ள இலங்கை அரசு இஸ்ரேலிற்கு எதிரான இந்த பிரேரணைக்கு வாக்களிக்காமல் விலகி நின்றமை இஸ்ரேலின் அத்துமீறல்களை ஆதரிகின்றதா? அனுமதிக்கின்றதா? என்ற கேள்வி எழும்புகின்றது. இதேநேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா “இஸ்ரேல் சதா காலமும் பலஸ்தீன் நாட்டை தன்வசம் வைத்திருக்க முடியாது” என்று  குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்தர்பத்தில், மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த இஸ்ரேலிற்கு எதிரான பிரேரணைக்கு இலங்கை நிச்சயம் வாக்களித்திருக்கும் என்பது முழு முஸ்லிம்களினதும் அபிப்ராயமாகும்.

எஸ்.சுபைர்தீன்

செயலார் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

By

Related Post