இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் கொழும்பு ரமடா ஹோட்டலில் இந்திய லோக சபை உறுப்பினர்கள், தமிழக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒன்று கூடலில் (13) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அதிதிகளில் ஒருவராக பங்கு பற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித சேனாரத்தினவும் கௌரவ அதிதிகளாக அமைச்சர் மனோகணேசன் , முஸ்லிம் ராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.