ஊடகப் பிரிவு
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியரின் டாடா குழுமத்தினர் அமைச்சர் றிஷாத் பதியுதீனை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.
இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக தொடர்புகள் பலம் வாய்ந்தவையென அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு எடுத்துரைத்தார் இலங்கை வர்த்தக மையமாக காணப்படுகின்றது என்றும் கூறினார்.
இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கையில் முதலீடுகளை செய்வதுடன் உற்பத்தி துறையில் அதிக ஆர்வத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும்,அதற்கான சூழலை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் இலங்கையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையொன்றினை தமக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் இப்பிரதி நிதிகளிடத்தில் எடுத்துரைத்தார்.
இலங்கையின் கைத்தொழில் துறை மேம்பாடுகளுக்கு இந்தியாவின் பங்களிப்பு பெரும் உதவி வழங்குவதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் புதிய அரசாங்கத்தின் கீழ் ஏற்றுமதி துறையில் பாரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் டாடா குழும பிரதி நிதிகளிடத்தில் எடுத்துiரைத்தார்.