Breaking
Fri. Dec 27th, 2024

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் பயணித்த பஸ் மீது 2009 மார்ச் 3ம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டபோது இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸார் உட்பட்ட 8 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது குறித்த 6 பேர் மீதும் குற்ற  பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு ஜூன் 30ம் திகதிக்கு பின்னர் சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் முதல் மூன்று சந்தேகத்திற்குரியவர்கள் பிணையில் செல்லஅனுமதிக்கப்பட்டனர்.

By

Related Post