இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பான விபரமான அறிக்கையை முன்வைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ரொடரிக் ச்ரிவேன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. அதில் உரை நிகழ்த்துகையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணயைாளரின் மதிப்பீடுகளை பார்க்கின்றோம். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம். மேலும் இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் வாய்மூல அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அவர் அறிக்கையை முன்வைத்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பான விபரமான அறிக்கையை முன்வைக்கும் என்றார்.
நேற்று ஆரம்பமான கூட்டத் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் ஆம் திகதி வரை நடைபெறும். எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை குறித்த வாய்மூல அறிக்கை வெளியிடப்படும்.