Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையில் 2 இலட்சம் சிறுவர்கள் உயரம் குறைந்தவர்களாக உள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள்மெல்லிய தோற்றத்துடன் காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 4 மில்லியனுக்கு அதிகமான இலங்கை சிறுவர்கள் இரத்த சோகை நோயிற்கு உள்ளாகியிருப்பதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் வைத்தியர் காமினி ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை சிறுவர்களின் விளையாட்டு நடவடிக்கைகள் குறைந்துள்ளமையால் அவர்கள் சிறுவயதிலே பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காலையில் பாடசாலைக்கு போகும் சிறுவர்கள் மாலையில் மேலதிக வகுப்பிற்கு செல்கின்றனர்.பிறகு கையில் பிஸ்கட்டுடன தொலைக்காட்சி முன்னாள் அமர்ந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக இவர்களது செயற்பாடுகள் குறைந்து சிறுவர்கள் நோயாளிகளாகும் நிலை ஏற்படுவதாகவும் வைத்தியர் காமினி ஜயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post