Breaking
Mon. Dec 23rd, 2024

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும்தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

 
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த புதன்கிழமை 1ஆம் திகதி கிங்ஸ்பெறி ஹோட்டலில் வைத்து இலங்கையின் சிரேஷ்ட அமைச்சர்களினை சந்தித்து உரையாற்றுகையிலேயே இதனைதெரிவித்தார்.
 
வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் வணிக வாய்ப்புக்களை ஆரம்பிப்பதுதொடர்பிலும் இரு தரப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளைவலுப்படுத்தும் நோக்கிலும் அவரின் விஜயம் அமைந்தது.
 
அனைத்தையும் உள்ளடக்கிய, நவீனத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்மூலம் இரு நாடுகளும் பலனடையும் என்று ஆரம்பகட்ட ஆய்வுகள்உறுதியாகத் தெரிவித்தன. ஒப்பந்தம் விரைவில் முடிவாவது தொடர்பானநடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஈஸ்வரன்கூறினார். வர்த்தகர்களுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நீடித்துநிலைத்திருக்கும் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் இவ் விஜயம்அமைந்ததாக ஈஸ்வரன் கூறினார்.
 
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைப் பிரதமர் சிங்கப்பூர்வந்திருந்தபோது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தேவை என்றுகேட்டுக்கொண்டதை அவர் சுட்டிகாட்டினார்.
 
இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி வேகம் பாராட்டுக்குரியது, ஆசியாவின் முக்கிய பிராந்தியமாக இலங்கையும் மாறிவருவது எமது இருநாட்டு வர்த்தக மேம்பாடுகளுக்கு மிகவும் வலு சேர்ப்பனவாக அமைந்துள்ளதுஎன்றும்  கூறினார்.
 
துறைமுகம் மேம்பாடு, குடிநீர் திட்டம், நிதித்துறை முதலியவற்றில்,முதலீடுகளை ஈர்ப்பதில், இலங்கை அரசு ஆர்வமாக உள்ளது. இங்கு முதலீடுசெய்வோருக்கு தேவையான உதவிகளை, அரசு செய்து தருவதாக உறுதிஅளித்துள்ளது.
 
இலங்கை சுற்றுலாத் துறையின் மீது சிங்கப்பூர் அதிக ஆர்வம்கொண்டுள்ளதால், சிங்கப்பூர் தமது முதலீட்டாளர்களை இலங்கைக்குஅனுப்புவதில் விருப்பம் கொண்டுள்ளதை தான் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன் என்றார்.
 
2015 இல் சிங்கப்பூரின் 39 ஆவது மிகப் பெரிய வர்த்தக பங்குத்தாரராகஇலங்கை இருந்ததாகவும், இரு தரப்பு நாடுகளையும் வலுப்படுத்த 2.05பில்லியன் டொலர் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு,சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்புசுமார் 2 பில்லியன் வெள்ளி எட்டப்பட்து.
 
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு, 1.9பில்லியன் வெள்ளியும் இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியானபொருட்களின் மதிப்பு 146 மில்லியன் வெள்ளியும்  ஈட்டப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு சிங்கப்பூர் 656 மில்லியன் டொலரை இலங்கைக்கு நேரடியாகமுதலீடு செய்ததாக சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சுதெரிவித்துள்ளது.
 
அத்துடன் சிங்கப்பூர் சர்வதேச நிறுவனம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம்ஆகியவற்றின் தலைமையில் 28 சிங்கப்பூர் நிறுவனங்களைச் சேர்ந்த வர்த்தகபிரதிநிதிகள், இலங்கையில் வர்த்தக வாய்ப்புகளை ஆராயவுள்ளதாகவும்மற்றும் தங்களது ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது
 
 
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் அபிவிருத்திநடவடிக்கைகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது முக்கிய கவனம்செலுத்தப்பட்டதாகவும் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலானதடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவெடுக்கப்படும் எனஉறுதியளித்தபட்டதாகவும் இலங்கையில் சுற்றுலாத் துறையில்முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு நாட்டுஉறவினை வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் கலந்துரையாடல்மேற்கொள்ளப்பட்டதாக கைத்தொழில் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
DSC_0111

By

Related Post