Breaking
Tue. Dec 24th, 2024
அஸ்ரப் ஏ. சமத்

இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால்  சீனா  -உலகத்தின் கவனத்தை ஈத்த” பட்டுப பாதை வா்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு கடற் பட்டுப்பாதையை ஒன்றாய் கட்டி எழுப்புவதற்கான திட்டம்” என்ற தலைப்பில்  இலங்கையில் உள்ள பாடாசலை மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா்களுக்கிடையே மும் மொழிகளிலும்  பேச்சுப் போட்டி ஒன்றை ஒழுங்கு படுத்தியுள்ளது.

மேற்படி விடயமாக இலங்கை – சீன நட்புரவுச் சங்கத்தின்  ஊடக மாநாடு கொழும்பு ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியது.
இங்கு சீன துாதுவரலாயத்தின பிரதி துாதுவா் ரெட், சீன நட்புரவுச் சங்கத்தின் செயலாளா் சுமதி சிரிமான, கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளா், ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் பணிப்பாளரும் கலந்து கொண்டனா்.
இப் பேச்சுப் போட்டி பற்றிய விண்னப்பங்கள், மற்றும் தகவல்களை
www.sl-china.net ல் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.  இப் போட்டியில் பங்கு பற்றுபவா்களுக்காக கல்வியமைச்சும், இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணம் பேச்சுப்போட்டியில் ஸ்டாா் போன்ற நிகழ்ச்சியில் தயாரித்து தோ்ந்தெடுப்பாா்கள்.
முதல் வெற்றி பெரும் 9 மாணவா்களும் அவா்களும் 9 ஆசிரியா்களுக்கும் 7 நாட்களுக்கு சீன நாட்டிற்கு சுற்றுலா வசதி செய்து கொடுக்கப்படும். இரண்டாம் இடத்தினை பெறும் 9 பேருக்கு டெப் டொப், பணப்பரிசில்களும் வழங்கப்படும். அதேபோன்று ஏனையோறுக்கும் முறையே விலை மதிக்கக் கூடிய பரிசில்களும் வழங்கப்பட உள்ளது.
இதில் தமிழ், சிங்களம், ஆங்கில மொழி முலமான பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் பங்கு பற்ற முடியும்.  என ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related Post