இலங்கை சுங்கப் பிரிவினரின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பொது பல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் மற்றும் பால் மா வர்த்தகம் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞனாசார தேரர் அறிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் குறித்து எழுத்து மூல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன பால் மா மோசடி வர்த்தகம் தொடர்பிலான முக்கிய தகவல்கள் காணப்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். சுங்கத் திணைக்களத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்படும் என ஞானசார தேரர் சிங்கள ஊகடமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது.