Breaking
Fri. Nov 15th, 2024
சோசலிச நாடாக இலங்கை உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பாணந்துறை நகர மண்டத்தில் நேற்றைய தினம் (5) நடைபெற்ற ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிக்கையில்,

குடும்ப ஆட்சி மற்றும் கூட்டு ஆட்சியினால் தோல்வியடைந்த நாடாக மாற்றமடைந்துள்ளது.

முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக ஜே.வி.பி முன்னெடுத்ததனைப் போன்றே சோசலிச நாடு ஒன்றை உருவாக்குவதிலும் பங்களிப்பு வழங்கும்.

ராஜபக்ச அரசாங்கம் 1000 பில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்காக கசப்பான மருந்து வழங்குவதாக நல்லாட்சி அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மருந்து அல்ல அது விசமேயாகும்.

நீல அரசாங்கமும் பச்சை அரசாங்கமும் மாறி மாறி தோல்வியடைந்த செல்வந்த கொள்கைகளை தற்போதாவது நிறுத்துவதற்கும், உண்மையான சோசலிச நாடு ஒன்றை உருவாக்கவும் ஜே.வி.பி முன்னிலை வகிக்கும்.

71ம் ஆண்டு வீரர்களின் அர்ப்பணிப்பினால் பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை வெளியேற வாய்ப்பு ஏற்பட்டது.

எதிர்காலத்தில் நாட்டை காலணித்துவத்திலிருந்து மீட்டு எடுக்கக் கூடிய கொள்கைகளை ஜே.வி.பியே முன்னெடுகின்றது.

68 ஆண்டு காலமாக நாட்டில் காணப்படும் தோல்வியடைந்த முதலாளித்துவ கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

By

Related Post