Breaking
Fri. Mar 14th, 2025

ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது.

அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –

ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கான விஜயம்  ஒன்றை ஜனவரி மாத நடுப்பகுதியில் செய்யவுள்ளதால்  அதற்கு முன்னதாக தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Post