ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கியூபாவின் தலைவர் பிடல் கெஸ்ரோ பின்பற்றும் வெளிநாட்டு கொள்கைகளையே பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர அபிவிருத்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே கெஸ்ட்ரோ, அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவை. ஏதிர்வரும் ஜூன் மாதம் தமது நாட்;டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்று ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்த ஈரான், ஆர்ஜன்டீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் தற்போது அமெரிக்காவுடன் விரோதப்போக்கை கைவிட்டு உறவுகளை சீர்செய்துள்ளன.
இதனையே இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பிடல் கெஸ்ட்ரோவின் கொள்கைகளை இலங்கை தலைவர்களும் பின்பற்றுவதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.