Breaking
Sun. Dec 22nd, 2024
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி இந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், எனினும், ஊழியர்கள் சாதாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து பீடங்களிலும் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தாம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் முகாமைத்துவ பீடம் 19ஆம் திகதி திறக்கப்பட்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பரீட்சை 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களை பழி வாங்கும் செயற்பாடாகவே இதனை தாம் கருதுவதாக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் 19ஆம் திகதியோடு பல்கலைக்கழகம் மூடப்பட்டு ஒரு மாதம் ஆகின்ற நிலையில், தமது கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார்.

By

Related Post