Breaking
Tue. Mar 18th, 2025

இலங்கையின் கடந்த வருட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உரிமை தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா கிரேபியோ இந்த கருத்தை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் 29வது கூட்டம் ஜூன் 13ம் திகதி தொடக்கம் ஜூலை 3ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதன்போது பிரான்சுவா கிரேபியோ இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்பித்து உரையாற்றவுள்ளார்.

அவரது அறிக்கையில் இலங்கை அகதிகள், அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், இலங்கை பொருளாதார நிலை போன்றவை குறித்த ஓராண்டு ஆய்வை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீளுருவாக்கம் முக்கியம் என்ற போதும் அதனை அகதிகள், உரிமைகளின் துருப்புச்சீட்டாக பார்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

Related Post