Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்  இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்பேன் என முன்னாள் பிரித்­தா­னிய பிர­தமர் டொனி பிளேயர் தெரி­வித்­துள்ளார்.

தனிப்­பட்ட விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வந்­துள்ள டொனி பிளேயர் நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­த­ி ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக ஜனா­தி­பதி செய­லக ஊடகப் பிர­ிவு வி­டுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்­ப­தாக டொனி பிளேயர் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்தலை மிகவும் அமை­தி­யான மற்றும் சுதந்­தி­ர­மான தேர்­த­லாக நடத்­து­வ­தற்கு செயற்­பட்­டமை தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு அவர் பாராட்­டுக்க­ளையும் தெரி­வித்தார்.

அத்­துடன் நாட்­டுக்கு சிறந்த அரச தலைமை தாங்கி, ஜன­நா­யகம் மற்றும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­திரிபால­ சி­றி­சேன முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து மகிழ்ச்­சி­ய­டைந்தார்.

மேலும் டொனி பிளேயர் மன்­றத்தின் சர்­வ­தேச வேலைத்­திட்­டத்­திற்குள் இலங்­கை­யுடன் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முடி­யு­மாக இருக்­கு­மென இதன்­போது ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கினார்.

அத்­துடன் இலங்­கையில் சுற்­று­லாத்­துறை அடைந்து வரும் முன்னேற்றத்தை பாராட்டிய அவர் மேலும் அதன் வளர்ச்சிக்காக வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்பதாக இதன் போது அவர் குறிப்பிட்டார்.

Related Post