ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களின் அமுலாக்கம் குறித்து ஆராய்வதற்கான கூட்டத்தொடரின்போது, சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் இலங்கை தொடர்பான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன். இலங்கை தொடர்பில் கடந்த 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைகளின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றே இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.