Breaking
Sun. Dec 22nd, 2024

குவைத்துக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் ணாக தொழி­லுக்கு சென்று அங்கு மர­ண­ம­டைந்த இலங்கை பெண்­தொ­டர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு இலங்கை பணிப்­பெண்­ணொ­ருவர் இறந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் அவர்­தொ­டர்­பான வி­ப­ரங்­களை உறு­தி­செய்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. எனினும் அவர் வெள்­ளத்­தம்பி சித்தி ஷகீரா எனும் பெயரில் N 0609335 என்ற இலக்­கத்­தைக்­கொண்ட கட­வுச்­சீட்டின் மூலம் குவைத்துக்கு சென்­றுள்ளார்.

எனவே அவரின் உற­வி­னர்கள் இருப் பின் அல்­லது உற­வி­னர்கள் தொடர்பாக ஏதேனும் தக­வல்கள் தெரி­ந்­த­வர்கள் இருப்பின் உட­ன­டி­யாக கொன்­சி­யூலர் பிரிவு, வெளி­வி­வ­கார அமைச்சு, சேர் பாரோன் ஜய­தி­லக்க மாவத்தை, கொழும்பு–01 என்ற முக­வ­ரிக்கு சமு­க­ம­ளிக்­கவும் அல்­லது 0112437635/ 0115668634 என்ற தொலைபேசி அல்லது 0112473899 என்ற பெக்ஸ் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post