ஏ.சீ.எம். சப்ரி
இலங்கை பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பயிலும் இலங்கை முப்படைகளைச் சேர்ந்த 20 பேர்களைக் கொண்ட உத்தியோகத்தினர் குழு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றினை 12.08.2014 தொடக்கம் மேற்கொண்டுள்ளனர்.
22.08.2014 வரை துபாய் மற்றும் அபுதாபியில் தங்கி இருக்கும் இச்சுற்றுலா குழு நேற்று (20) துபாயில் உள்ள பிரதித் தூதுவராலயத்திரற்கு விஜயம் செய்தனர்.
துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவர் M.M அப்துல் ரஹீம் மற்றும் தூதுவராலய அலுவலர்கள், இலங்கை குழுவினரை வரவேற்றதுடன், அப்துல் ரஹீம், துபாய் இலங்கைக்கான உறவுகள் மற்றும் பிரதித் தூது வராலயத்தினால் ஆற்றப்படும் இதர சேவைகள் பற்றி குழுவினருக்கு விளக்கம் அளித்தார்.