Breaking
Sun. Mar 16th, 2025

‘இலங்கை அரசாங்கமானது, மிகமுக்கியமான செயற்பாடுகள் பலவற்றை முன்வைத்து, புதிய பயணத்தில் இணைந்துள்ளது’ என்று சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமே தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவைத்துள்ள புதிய பயணத்தில், பொருளாதார மற்றும் கைத்தொழில் துறைகளில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுவதனால், முழு சமூகத்திலும் பாரிய அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், ஜனாதிபதி டோனி டான் கெங் யாமே தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, குறுகிய அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கு பதிலாக, நாட்டின் சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ள நாட்டு மக்கள், கடந்த வருடம், இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆணையைக் கொடுத்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் ஊடாக, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடுகளை, உயர்ந்த நிலையில் தூக்கிவைப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்களுக்கு, சிங்கப்பூரின் உதவியை எதிர்ப்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்தியம்பியுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post