Breaking
Wed. Dec 25th, 2024
குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குவைத் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி, பஹாலில் பிரதேச இடம் ஒன்றில் இருந்து 33வயதான இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இதனையடுத்து, சுமார் 3 மணியத்தியாலங்களுக்குள் இறந்த பெண்ணின் நண்பர் என்ற ஆப்கானிஸ்தானியர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின்போது தமது நண்பருடன் குறித்த இலங்கை பெண் உறவை கொண்டிருந்ததாக சந்தேகித்தே தாம் அவரை கொலை செய்ததாக ஆப்கானிஸ்தானியர் ஏற்றுக்கொண்டார் என தெரிவித்ததாக குவைத் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Related Post