Breaking
Fri. Nov 22nd, 2024

இலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று (4) சமர்ப்பித்துள்ளது.

மனித உரிமையின் அடிப்படையில் மரணத்தண்டனை கொடூரமானதாகும் மனிதாபிமானமற்றதாகும். ஆகவே மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

By

Related Post