Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியாயாவுக்கிடையிலான வர்த்தகத்ததை ; பெருமளவில் அதிகரிக்கும்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையே 2013 ஆம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருந்த  இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்ல மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதையடுத்து கோலாலம்பூரில்  மலேசியாவின் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  டேரெல் லேக்கிங்க்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும்  இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இப் பேச்சுவார்த்தையில்  அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: கோலாலம்பூரில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மலேசியாவில் இடம்பெற்ற கூட்டு ஆணைக்குழுவின் இரண்டாம் அமர்வின் போது இரு தரப்பினரும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்து செல்ல, எதிர்கால சாத்தியங்களை ஆராய கொள்கை அடிப்படையில் உடன்பட்டனர். இந்த உடன்பாடுகளை முன்னெடுக்க மலேசியா முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் புள்ளி விபரப்படி, 2013 ஆம் ஆண்டில் இருந்து ஐந்து வருட காலப்பகுதியில் (2013- 2017) இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 20மூ சத வீத அதிகரிப்புடன்  693 மில்லியன் அமெரிக்க  டொலர் எட்டப்பட்டது. இவ்வருடம் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையுள்ள ஆறு மாத காலப்பகுதியில் 361 மில்லியன் அமெரிக்க  டொலர் பெறுமதியான  வலுவான வர்த்தகம் பதியப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் மலேசியாவில் இருந்து 92 சதவீதமான மொத்த வர்த்தகத்தில் 641 மில்லியன் டொலர் இறக்குமதி செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏழாவது மிகப்பெரிய இறக்குமதி நாடாக மலேசியா காணப்பட்டது. மலேசியாவின் பிரதான இறக்குமதி (2017 ஆம் ஆண்டு) மரம், போர்ட்லேண்ட் சிமெந்து, பிளாஸ்டிக், பெற்றோல், செயற்கை ரப்பர் மற்றும் எரிவாயு எண்ணெய், டீசல் ஆகியவையும். மலேசியாவிற்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதியாக (2017 ஆம் ஆண்டு) உணவு தயாரிப்புக்கள், மெஸ்லின் மாவு, தேயிலை மற்றும் ஆடைவகைளும் காணப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் புதிய முயற்சிகள் மேம்படுத்தப்படவேண்டும். நமது அரசாங்கத்தின் கீழ் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவேண்டும். இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியா  இடையிலான வர்த்தகம் பெருமளவில் அதிகரிக்கும். இலங்கையுடனான உடன்படிக்கையில் இரு நாடுகளும் முன்னுரையில் ஒப்புக்கொண்டது  தொடர்பிலும் இருதரப்பில் மத்தியில் காணப்படும் ஆர்வத்தினை எமது ஐனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவிக்கவுள்ளேன்.

மலேசியாவில் எங்களுடைய சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையினருக்கு  பயிற்சி வாய்ப்புகள் உள்ளன என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இத்துறையினருக்கு இது போன்ற வாய்ப்புகளை வழங்குவதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக சாத்தியங்களை ஆராய மலேசிய அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினரை நாங்கள் வரவேற்கின்றோம். என்று அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Related Post