Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கையுடன் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகலை தீர்த்துக்கொள்ளும் வகையில் உயர்மட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

மாலைதீவின் வெளியுறவு அமைச்சர் தஹன்யா மயூமூன் நேற்று (9) இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து உரையாடியுள்ளார்.

முன்னதாக அவர் கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த சந்திப்புக்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று மாலைத்தீவு அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாலைத்தீவில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவர் உட்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை, மாலைதீவின் சமூக தள நடவடிக்கையாளர் ஒருவர் இலங்கையில் இருந்து அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்களினால் இரண்டு நாடுளுக்கும் இடையிலான உறவில் கடந்த மாதம் விரிசல் ஏற்பட்டிருந்தது.

By

Related Post